பா.ஜ.க.வின் தலைவர் அமித் ஷா மகன் ஜெய் அமித் ஷா மீதான குற்றச்சாட்டு குறித்து பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருப்பது ஏன் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத் மாநிலம் காம்லா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது, “பா.ஜ.க தலைவர், அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் ஷாவின் நிறுவனத்தின் மதிப்பு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.80 கோடியாக உயர்ந்துள்ளது. 2014இல் அடையாளமே இல்லாமல் இருந்த ஒரு நிறுவனம், 16 ஆயிரம் மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இது எப்படி சாத்தியம் ஆகும். ஊழல் யார் செய்தாலும் என்னிடம் இருந்து தப்ப முடியாது என்று கூறி கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தற்போது மவுனமாக இருப்பது ஏன்?” என்றுள்ளார்.
Home
»
India
»
அமித் ஷா மகன் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் நரேந்திர மோடி அமைதியாக இருப்பது ஏன்?; ராகுல் காந்தி கேள்வி!
Tuesday, October 10, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment