தேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே என்று இலங்கை பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். நாடு முகங்கொடுத்துள்ள பாரிய சவால்களை வெற்றிகொள்வதற்குத் தேவையான பலமும் இயலுமையும் ஜனாதிபதியிடம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெப்பிலியான சுநேத்திரா மகாதேவி ரஜமகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே மெதகொட அபயதிஸ்ஸ தேரர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதிக்கு இந்த நாட்டைப்பற்றியும் நாட்டு மக்கள் பற்றியும் உள்ள அக்கறை மிகத்தெளிவானது. சுதந்திரம் கிடைத்தது முதல் இந்த நாட்டில் சிறுபான்மை இனத்திற்கும் பெரும்பான்மை இனத்திற்குமிடையே பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் அரசியல்வாதிகள் என்றும் அவ்வாறு உருவாக்கப்பட்ட சில அடிப்படைவிதைகள் இன்னும் இருப்பதாகவும் அந்த விதைகளை அகற்றி அனைத்து இனங்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவது தமது நோக்கமாகும் என ஜனாதிபதி என்னிடம் குறிப்பிட்டுள்ளார்.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
தேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவர் மைத்திரி: மெதகொட அபயதிஸ்ஸ தேரர்
Monday, October 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment