புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் அமைந்தால், அதற்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்காது என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மடக்கும்புர பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, “புதிய அரசியலமைப்பில் நாடு ஒருபோதும் பிளவுப்படாது. வடக்கு- கிழக்கை இணைப்பதோ அல்லது பௌத்த மதத்திற்கான முன்னுரிமையை நீக்குவதோ இதன் நோக்கமும் அல்ல. ஒருமித்த நாட்டுக்குள் சமாதானமாக வாக்களிக்கவே அரசியலமைப்பு உருவாக்கப்படுகிறது. அதனை தாண்றிச் சென்றால் அரசியலமைப்புக்கு எதிராக வாக்களிக்கவும் தயாராகவே இருகின்றோம். உள்ளுராட்சி தேர்தலில் பல்வேறு கட்சிகளுடன் பாரிய கூட்டணியை அமைத்தே களமிறங்கும்.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
நாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைந்தால் வாக்களியோம்: சுதந்திரக் கட்சி
Monday, October 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment