தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “லகர, ளகர, ழகர வேறுபாடுகள் மற்றும் ன, ந, ண போன்றவற்றின் வேறுபாடுகளை சரியாக உள்வாங்கி இப்போது பிள்கைகள் தமிழை உச்சரிப்பதில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “முன்பு வானொலி ஒலிபரப்புக்களில் பேசப்படுகின்ற தமிழ் இலக்கிய நடை நிறைந்ததாக முறையான உச்சரிப்புடன் கூடியதாக அமைந்திருக்கும். ஆனால், இப்போதோ வானொலிப்பெட்டியை அல்லது தொலைக்காட்சிப் பெட்டியைத் திருப்பினால் அங்கு பேசப்படு”ன்ற தமிழை எப்படி வர்ணிப்பதென்று எமக்குப் புரியவில்லை. சில திரைப்படங்கள்கூட இவ்வாறான பிழைகளை விட ஊக்குவிக்கின்றன”என்றுள்ளார்.
Wednesday, October 25, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment