நடிகை ஒருவரை கடத்தி பாலியல் கொடுமை செய்த வழக்கில் நடிகர் திலீபுக்கு கேரள உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
பிரபல மலையாள நடிகை, காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை 10ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஆலுவா கிளை சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள், கொச்சி ஐகோர்ட்டில் 2 தடவையும், அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒரு தடவையும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து, அங்கமாலி கோர்ட்டில் நடிகர் திலீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால், திலீப்பை ஜாமீனில் விடுவித்தால், விசாரணை பாதிக்கப்படும் என்று போலீஸ் தரப்பு கூறியதையடுத்து, திலீப் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
55 முறை ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் கேரள உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. கைதாகி 85 நாட்களுக்கு மேலாகியும் குற்றப் பத்திரிக்கை தக்கல் செய்யப்படவில்லை என்பதை நீதிமன்றத்தில் திலீபின் வக்கீல் ராமன் பிள்ளை சுட்டி காட்டி வாதாடினார். அரசு தரப்பில் திலீப் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைப்பார் என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Tuesday, October 3, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment