சென்னை கோபாலபுரத்தில் தனது கொள்ளுப்பேரன் மனோரஞ்சித், நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதா திருமணத்தை திமுக தலைவர் கலைஞர் இன்று நடத்தி வைத்தார்.
தி.மு.க. தலைவர் கலைஞரின் மகன் மு.க.முத்து- சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே. ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்ஷிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கலைஞரின் வீட்டில் இன்று காலை நடைபெற்றது.
இந்த திருமணத்தில் கலைஞர் மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். அரசியல் கட்சியினர் யாரும் பங்கேற்கவில்லை. திருமண விழாவில் மு.க.அழகிரி, காந்தி அழகிரி, செல்வி குடும்பத்தினர், மு.க.தமிழரசு, ராஜாத்தி அம்மாள், கனிமொழி, துர்கா ஸ்டாலின், தயாநிதிமாறன், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் அமிர்தம், முரசொலி செல்வம், கவிஞர் வைரமுத்து மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இவர்களது திருமணம் முடிந்ததும் கலைஞரை வீல்சேரில் வைத்து வாசலுக்கு அழைத்து வந்தனர். வெளியில் கூடியிருந்த பத்திரிகையாளர்கள், பொதுமக்களை பார்த்த பிறகு மீண்டும் உள்ளே அழைத்து சென்றனர்.
Monday, October 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment