தாஜ்மஹால், இந்திய கலாச்சாரத்தின் கறைபடிந்த அழுக்கு என கடந்த திங்கட் கிழமை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சங்கீத் சம் கூறிய கருத்து இணையத்தளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த நினைவாலயம், இந்தியத் துரோகிகளால் கட்டப்பட்டது எனவும், தாஜ்மஹாலை கட்டியவர்கள், சொந்த தந்தையை சிறைவைத்தவர்கள். இந்துக்களை முற்றாக அழிப்பற்கு கங்கணம் கட்டியவர்கள், அவர்கள் எமது வரலாற்றில் ஒரு பகுதியாக தொடர்ந்து பேசப்பட்டு வந்தால், அது கவலைக்குரிய விடயம். அந்த வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டும் என அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
உத்தரபிரதேசத்தின் சுற்றுலாத் தளங்களுக்கான பட்டியலிலிருந்து அண்மையில் தாஜ்மஹால் நீக்கப்பட்டிருந்தது. தாஜ்மஹால் இந்திய பாரம்பரியக் கட்டிடக் கலையை பிரதிபலிக்கவில்லை என உத்தரபிரதேச அரசு இதற்கு விளக்கம் கூறியிருந்தது.
இந்நிலையில் சங்கீத் சம்மின் கருத்துக்களுடன் தனக்கு உடன்பாடில்லை என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யானத் கூறியுள்ளார். தாஜ்மஹாலும், செங்கோட்டையும் இந்திய பாரம்பரிய கலாச்சாரங்களின் பகுதியே. இவற்றை பாதுகாக்கவேண்டியது நமது கடமை. ஏனெனில் இவை இந்திய தொழிலாளர்களின் இரத்திலும், வியர்வையிலும் கட்டப்பட்டவை என அவர் கூறியிருந்தார்.
இதேவேளை «தாஜ்மஹால் அடிப்படையில் ஒரு சிவன் ஆலயம் எனவும், தேஜோ மஹால் என்றோ அழைக்கப்பட்டதாகவும், சாஜஹான் பின்னர் இந்த ஆலயத்தை கைப்பற்றி மும்தாஜின் நினைவாலயமாக மாற்றிவிட்டார்» எனவும் குற்றம் சாட்டியுள்ளார் மற்றுமொரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வினாய் கடியார்.
Wednesday, October 18, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment