ஸ்பெயினின் தொழில் வளம் மிக்க மாநிலமான கேட்டலோனியாவைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அம்மாநில மக்கள் சில வருடங்களாகவே முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கான வாக்கெடுப்பை கேட்டலோனிய பாராளுமன்றம் அண்மையில் நடத்தியிருந்த போதும் அது செல்லாது என ஸ்பெயின் அரசு தெரிவித்திருந்தது. இதனை அடுத்து ஸ்பெயினில் அரசியல் பதற்ற நிலை தோன்றியதுடன் கேட்டலோனிய சுதந்திரத்தை ஆதரித்தும் எதிர்த்தும் அங்கு பல ஆர்ப்பாட்டப் பேரணிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை கேட்டலோனியாவை சுதந்திர தனி நாடாக அம்மாநில பாரளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தன்னிச்சையாக அறிவித்துள்ளது.
இதனால் ஸ்பெயின் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளதுடன் சுதந்திர கேட்டலோனியாவுக்கு எதிரான மக்கள் மத்தியில் அதிருப்தி மேலும் அதிகரித்துள்ளதுடன் நாட்டில் கலவரங்கள் மேலும் தோன்றுவதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது. தனிநாட்டு பிரகடனத்தை ஸ்பெயின் எதிர்க் கட்சிகள் தமது நாட்டின் ஜனநாயகத்தின் கருப்பு நாள் என்று கடுமையாக ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில் ஸ்பெயின் அரசு தமது மக்களை அமைதி காக்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது.
ஸ்பெயின் அரசு கேட்டலோனிய மாநிலம் மீது நேரடி அரசாட்சியைத் திணிப்பதற்கு ஆலோசித்து வந்த நிலையில் இந்த தனி நாட்டுப் பிரகடனத்தை கேட்டலோனிய பாராளுமன்றம் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 4 தசாப்தங்களில் இல்லாத மிக மோசமான அரசியல் குழப்ப நிலை ஸ்பெயினில் தோன்றியுள்ள நிலையில் கேட்டலோனியாவின் தனி நாட்டுப் பிரகடனத்தை ஸ்பெயினும் சர்வதேச சமூகமும் இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதும் முக்கியமானது. இந்நிலையில் கேட்டலோனியா புதிய குடியரசாக உதயமாவதற்காக ஸ்பெயின் அரசுடன் திறந்த பேச்சுவார்த்தையை நடத்தத் தயாராக இருப்பதாக பார்சிலோனா அறிவித்துள்ளது.
Home
»
World News
»
ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிரகடனப் படுத்தியது அம்மாநிலப் பாராளுமன்றம்
Saturday, October 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment