Thursday, October 5, 2017

‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கில் முன்னெடுக்கும் போராட்டம் நியாயமானது. அவர்களின் கோரிக்கைக்கு விரைவில் உரிய தீர்வு வழங்கப்படும்’ என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது, அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா, சிறைச்சாலைகளில் எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியத்தருமாறு அவர்கள் கேட்கின்றனரே தவிர, காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடித்தாருங்கள் என்று கேட்கவில்லை. இவ்வாறு அவர்கள் கேட்பது நியாயமானதாகவே நான் கருதுகிறேன். வடக்குக்கு, அண்மையில் சென்று அவர்களை சந்தித்த போது இதற்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என கூறினேன். தொடர்ந்தும் இந்த விடயம் குறித்து அரசாங்கம் கவனஞ்செலுத்தி வருகிறது.”என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer