“புதிய அரசியலமைப்புத் தொடர்பில் தமிழ் மக்களிடம் சென்று உண்மையைக் கூறுங்கள், தெளிவுபடுத்துங்கள்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம், அந்தக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.
“ஆட்சியை மீண்டும் பிடிக்க மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியானது புதிய அரசியலமைப்புத் தொடர்பிலும், வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் விஷமத்தனமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றது. இதற்கு வலுச்சேர்ப்பதுபோல் எமது தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்ப் பிரதேசங்களுக்குச் சென்று தமிழ் மக்களுக்கு புதிய அரசியலமைப்பு மற்றும் இடைக்கால அறிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தவேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூட்டத்தைப் புறக்கணித்திருந்தார். ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் இருவரும் தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்க முடியவில்லை என்று அறிவித்திருந்தனர். அந்தக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Monday, October 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment