தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மாகாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படும் கதவடைப்புப் போராட்டத்தினால், வடக்கு முற்றுமுழுதாக முடங்கியுள்ளது.
வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலை உள்ளிட்ட சில அத்தியாவசிய விடயங்கள் மாத்திரமே தொடர்கின்றன.
இந்தக் கதவடைப்புப் போராட்டம், “தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற உடனடிக் கோரிக்கையையும், அவ்வாறு மாற்றப்பட்டதன் பின்பு, தமது வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிவு காணவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து, அநுராதபுரம் சிறையில் சாகும் வரை உணவுத் துறப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகள் மூவரின் கோரிக்கைகளை இழுத்தடிப்பின்றி உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும்,
முழுத் தமிழ் அரசியற் கைதிகளையும் ஓர் அரசியற் தீர்மானத்தினூடாக விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும்,
அசமந்தப் போக்கைக் கைவிட்டும் - மழுப்பல் பதில்களை வழங்காமலும் - அனைத்து தமிழ் அரசியற் கைதிகளையும் விடுவிப்பதற்கான நேரடி அழுத்தத்தினை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்குமாறு எமது பாராளுமன்றப் பிரதிநிதிகளை வற்புறுத்தியும்” முன்னெடுக்கப்படுகின்றது.
Saturday, October 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment