புளி இரத்தத்தைச் சுண்ட வைக்கும் என்பது ஒரு மூட நம்பிக்கை. இரத்தத்தை முறிக்கக் கூடிய சத்து ஏதும் புளியில் இல்லை.
குமட்டல், வாந்தி ஏற்பட்டால் சிறிதளவு புளியை வாயில் போட்டு நீரை விழுங்கினால் வாந்தி நிற்கும்.
அடிபட்டு இரத்தக்கட்டு ஏற்பட்டால் புளியும், உப்பும் கலந்து அரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து தாங்கக்கூடிய சூட்டுடன் பற்றுப் போட்டால் இரத்தக்கட்டு கரைந்துவிடும்.
முரசு வீக்கம், பல் வலி இவற்றிற்கு சிறிதளவு புளியும் அதே அளவு உப்பும் கலந்து வலியுள்ள இடத்தில் வைத்திருந்து 10 நிமிடம் கழித்து வாயில் வைத்திருந்த புளியை துப்பி வெந்நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி மூன்று வேளையும் செய்தால் பல் வலி குறையும். அந்த உமிழ் நீரை விழுங்கக்கூடாது.
Monday, October 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment