சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் மனிதாபிமானத்துக்கும் நியாயத்துக்கும் புறம்பாகவே கையாள்வதாக சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யுத்தகால அரசியலின் போது கைது செய்யப்பட்டுச் சிறைவாசம் அனுபவிக்கும் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு மூலம் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் கைது செய்யப்படுவதற்குக் காரணமான அரசியல் சூழல் இன்றில்லை.
அந்த அரசியல் சூழலில் செயற்பட்ட 12 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கி, அவர்களை விடுதலை செய்து பொதுவாழ்வில் இணைத்துள்ளதைப் போல, இந்த அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பு மூலமாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
இந்தக் கைதிகளின் வழக்கு விசாரணை, விடுதலைச் சாத்தியங்கள் போன்றன பற்றித் தெரியாத நிலையில் குடும்பத்தினர் மிகுந்த அவல வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது தமிழ்ச் சமூகத்தின் அரசியல் போக்கினையும் உளவியலையும் ஆழமாகப் பாதித்துள்ளது. ” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமானத்துக்கு புறம்பாக அரசு கையாள்கிறது: முருகேசு சந்திரகுமார்
Saturday, October 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment