“வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மாகாணச் சட்டங்களைக் கற்று, தங்கள் அதிகாரம் என்ன, எல்லை என்ன என்பதை, முதலில் அறிய வேண்டும். அதன் பின்னர், அதற்குள் நின்று நியதிச் சட்டங்களை உருவாக்க வேண்டும்.” என்று வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 108வது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதன்போதே, எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்னமும் பல நியதிச் சட்டங்கள் உருவாக்கப்படவில்லை. உறுப்பினர்கள், மாகாணச் சட்டங்களைக் கற்று, தங்கள் அதிகாரம் என்ன, எல்லை என்ன என்பதை, முதலில் அறிய வேண்டும். அதன் பின்னர், அதற்குள் நின்று நியதிச் சட்டங்களை உருவாக்க வேண்டும். நியதிச் சட்டங்களை, மற்றைய மாகாண நியதிச் சட்டங்களைப் பெற்று, அதனை எமது மாகாணத்துக்கு ஏற்றவாறு மாற்றி உருவாக்கலாம். அதனைக் கூடச் செய்யாது, கால தாமதபடுத்திக் கொண்டு உள்ளோம்.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை கற்றுத் தெளிய வேண்டும்: சி.தவராசா
Friday, October 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment