Thursday, October 12, 2017

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பிரபு பொங்கிவிட்டார் பொங்கி. நடிகர் திலகம் சிவாஜியின் மணி மண்டப திறப்பு விழா வரைக்கும் பொறுத்திருந்தவர், அன்று மாலை சிவாஜி ரசிகர்களை மட்டும் தனியாக சந்தித்தார். அப்போது, “அப்பாவை தொடர்ந்து சிலர் அவமானப்படுத்திகிட்டேயிருக்காங்க.

நாம் பயந்து ஒதுங்கியது போதும். இனி எதற்கும் அஞ்சக் கூடாது.

அதுக்கு நீங்கள்லாம் ஒற்றுமையா ஒரே கரமா இணைஞ்சிருந்தா போதும். சாதிச்சுடலாம்” என்றெல்லாம் பேச, வந்தவர்களுக்கு படு குழப்பம்.

ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க போன்ற தேசிய கட்சிகள் பிரபுவுக்கு நூல் விட்டுப் பார்த்ததாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இவரது ஆவேசம் எங்கு போய் முடியுமோ?

சும்மா கிடக்கிற சுவர் கோழிகளை கூட, உசுப்பி உசுப்பியே சண்டைக் கோழியாக்கிடும் சொசைட்டி! தப்பிச்சுடுவாரா பிரபு?

0 comments :

Post a Comment

 
Toggle Footer