நடிகை எமி ஜாக்ஸன் தற்போது ரஜினியுடன் 2.O படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து இந்தியிலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இந்திப் படங்களில் நடிக்கவேண்டும் என்பதற்காக இந்தி மொழியைக் கற்கத் துவங்கி உள்ளார்.
லண்டனிலிருந்து இந்தியாவிற்கு வந்து 'மதராசபட்டினம்' படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது ஹிந்தி கற்க ஒரு இந்தி மாஸ்டரை பணி அமர்த்தியிருக்கிறார் எமி ஜாக்ஸன்.
இது குறித்து நடிகை எமி ஜாக்ஸன் கூறுகையில், இரண்டு வாரங்களுக்கு முன்பிலிருந்துதான் இந்தி கற்கத் ஆரம்பித்துள்ளேன். புதிய மொழி என்பதால் கொஞ்சம் கஷ்டம்தான், இருந்தாலும் அதை முறைப்படி கற்றுக் கொள்வேன்.' எனக் கூறியிருக்கிறார்.
'தற்போது '2.O' ப்ரொமோஷன் வேலைகளில் இருப்பதாலும், சில வெளிநாட்டுப் படங்களில் நடிப்பதாலும் ஸ்கைப் மூலம் ஹிந்தி கற்று வருவதாக தெரிவித்துள்ளார் எமி ஜாக்ஸன்.
Saturday, October 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment