“நாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரசியலமைப்பினை கொண்டு வர அரசாங்கம் முயல்கின்றது. ஆனால், மக்கள் விரும்பாத புதிய அரசியலமைப்பைத் திணித்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு மருதானையில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “மல்வத்தை, அஸ்கிரிய, கோட்டே உட்பட சகல பீடங்களும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கத்தோலிக்க சபையும், புதிய அரசியலமைப்பு விடயத்தை அவதானமாக கையாள வேண்டும் என்று கோரியுள்ளது. முழு நாடும் புதிய அரசியலமைப்பு உருவாவதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில், பலவந்தமாக புதிய அரசியலமைப்பை திணிக்க அரசாங்கம் முயல்கிறது.
பிக்குமார்கள் சொல்வதை கூட இந்த அரசாங்கம் செவிமடுப்பதாக இல்லை. பெரும்பான்மையினரும், முழுநாடும் புதிய அரசியலமைப்பிற்கு ஆட்சேபனை தெரிவித்திருக்கிறது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசியலமைப்பை உருவாக்குவதாக அரசாங்கம் கூறிவருகிறது. இந்தப் புதிய அரசியலமைப்பினூடு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
நாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரசியலமைப்பை திணிக்க முடியாது: மஹிந்த
Tuesday, October 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment