‘பொத் ’தென இருந்த சிம்பு, இப்போது அநியாயத்துக்கு ஸ்லிம் ஆகிவிட்டார். ஜிம் வொர்க்கவுட் என்று எதுவும் இல்லாமல் அவர் இப்படி ஸ்லிம் ஆனதன் பின்னணி அறிந்து கொள்ள இன்டஸ்ட்ரி ஆர்வம் காட்டினாலும், ‘இதெல்லாம் எதுக்கு?’ என்ற ஆர்வம் அதுக்கும் மேலவாகிக் கிடக்கிறது அநேகம் பேருக்கு!
அவர் ஒரு ஆங்கில படத்தை இயக்கி அதில் நடிக்கவும் போகிறாராம். இந்த திரைப்படத்திற்கு வசனம் எழுதும் பொறுப்பு கவுதம் மேனனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ஹாலிவுட் படம் ஒன்றில் தனுஷ் நடிக்கிறார் என்பதாலேயே சிம்பு சிலுப்பிக் கொண்டு கிளம்பியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தாலும், அவ்வளவு பெரிய கடலில் இவ்விரண்டு கடுகுகளும் விழுந்த இடம் தெரியாமல் போவார்கள் என்பதுதான் நிஜம்.
இருந்தாலும், இங்கிருக்கும் மீடியாவுக்கு எதையாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமே? தூங்கு மூஞ்சி மரமா இருந்தாலும், இலை மூடுனா கிளை சிரிக்குமே? செய்ங்க செய்ங்க...
Tuesday, October 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment