உத்தரப்பிரதேசத்தின் சுற்றுலாத் தலங்களுக்கான பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரப்பிரதேசத்தின் சுற்றுலாத் தலங்களுக்கான புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் உலகப் புகழ்வாய்ந்த தாஜ்மஹால் இடம்பெறவில்லை. அரசின் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் தாஜ்மஹால் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில், உத்திரப்பிரதேச அரசின் புதிய சுற்றுலா மையங்களின் பட்டியலில் காசி நகரத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் பிறப்பிடமான மதுராவுக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின் கோரக்பூர் மடத்திற்கு நான்காவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
மொகலாய மன்னர் ஷாஜகான் அவரது மனைவி மும்தாஜின் நினைவாகவும் தங்களின் காதலின் சின்னமாகவும் தாஜ்மஹாலை கட்டினார். புகழ்ப்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு ஆண்டுதோறும் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தை பின்பற்றி கட்டப்படாததால் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என உத்தரப்பிரதேச அரசு விளக்கம் அளித்துள்ளது.
Tuesday, October 3, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment