புதிய தலைமைக்கு வழிவிடுவதே சிறந்த தலைமைத்துவப் பண்பாகும் என்று வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரான பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
“சனசமூக நிலையங்களின் தலைவர்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரையில், தலைமைப் பதவிக்கு வந்தவுடன் தமது ஆயுட்காலம் முழுவதும் அந்தப் பதவியில் நீடிக்க வேண்டும் என்றே நினைக்கின்றார்கள். அதுவும், அவர்களினால் இயலாத நிலையிலும் தலைமைப் பதவியில் இருக்கவே விரும்புகின்றார்கள். இது நல்ல விடயமல்ல. அடுத்த தலைமைக்கு வழிவிடுவதே தலைமைத்துவப் பண்புகளில் முக்கியமானது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி அரசினர் தமிழ் கவலன் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
Thursday, October 5, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment