Saturday, October 14, 2017

எதையும் திடீர் திடீரென அறிவித்து இன்டஸ்ட்ரியை திண்டாட விடுவதுதான் விஷாலின் ஒரே பொழுதுபோக்காக இருக்கிறது. அதுவும் ‘ஸ்டிரைக்’ விஷயத்தில், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவர் புரட்டி புரட்டிப் போட்டு விளையாடுவதால் ஆங்காங்கே படு குழப்பம்.

இந்தவார குழப்பம் 6 ந் தேதியிலிருந்து புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை என்பது. தயாராக இருந்த சுமார் ஒன்பது படங்களின் தயாரிப்பாளர்கள் கண்ணீர் வடிக்க, ‘உங்களுக்கு 6 ந் தேதிதானே ரிலீஸ் பண்ணக் கூடாது? நான் 5 ந் தேதியே வர்றேன்’ என்று குறுக்கு சால் ஓட்டியது ‘சோலோ’ என்ற படம்.

வழக்கம் போல விஷால் அமைதிகாக்க.... சங்க செயற்குழு கொந்தளித்துவிட்டது.

‘அவரு மட்டும் புத்திசாலி. மற்றவங்கள்லாம் ஏப்பை சேப்பையா?’ என்று எகிற, தியேட்டருக்கு போன படத்தை ஒரு நாளோடு நிறுத்தினார் விஷால்.

தயாரிப்பாளர்கள் சங்கம் ரிலீஸ் இல்லை என்று அறிவிக்க.... தீபாவளியிலிருந்து தியேட்டரே குளோஸ் என்கிறது திரையரங்க வட்டாரம். மெர்சல் கதி என்னாகுமோ?

0 comments :

Post a Comment

 
Toggle Footer