Thursday, October 19, 2017

அமெரிக்காவின் அதிபர் இல்லமான வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியர்களுடன் இணைந்து இன்று புதன்கிழமை குதூகலத்துடன் தீபாவளிக் கொண்டாட்டத்தில் பங்கு பற்றியுள்ளார்.

அதிபர் டிரம்ப் அதிபராகப் பதவி ஏற்ற பின் அவர் பங்கு பற்றிய முதலாவது தீபாவளிக் கொண்டாட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற இன்றைய தீபாவளிக் கொண்டாட்டத்தில் டிரம்பின் மகள் இவாங்கா, ஐ.நா இற்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹலே மற்றும் இந்திய அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த இந்திய நிர்வாகிகள் என்போரும் இணைந்து கொண்டனர்.

தீபாவளிக் கொண்டாட்டத்தின் பின் டிரம்ப் உரையாற்றுகையில் அமெரிக்காவுக்கும் உலகுக்கும் இந்திய அமெரிக்கர்கள் ஆற்றி வரும் பங்களிப்பு மிகப் பெரியது என்றார். மேலும் அமெரிக்காவில் கலை, மருத்துவம், கல்வி, அறிவியல் மற்றும் இராணுவத் துறைகளில் பங்காற்றி வரும் இந்தியர்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். உலகம் முழுவதும் 100 கோடி மக்கள் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகையை அமெரிக்காவில் வசிக்கும் 20 இலட்சத்துக்கும் அதிகமான இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

வெள்ளை மாளிகையில் முதன் முறை முன்னால் அதிபர் புஷ் தொடங்கி வைத்த தீபாவளிக் கொண்டாட்டம் அவரைத் தொடர்ந்து முன்னால் அதிபர் ஒபாமா மற்றும் தற்போதைய அதிபர் டிரம்ப் ஆகியோரால் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப் பட்டு வருகின்றது. இத் தீபாவளிப் பண்டிகை இந்திய அமெரிக்கர்களின் ஒன்று கூடலுடன் குத்து விளக்கேற்றி கொண்டாடப் படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer