தலைநகர் டெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தின் இரண்டாவது மாடியிலுள்ள அறை எண் 242இல் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
உடனடியாக தீ அணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டு, தீ அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அதிகாலை 3.35 மணியளவில் ஏற்பட்ட தீ 20 நிமிடங்களில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
கணிணி யூபிஎஸ்சில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என்று தீ அணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் எந்த வித சேதமும் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட அறை, பிரதமர் அலுவலகத்தின் ஒரு பிரிவு அதிகாரியின் அறை என்று கூறப்படுகிறது.
Tuesday, October 17, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment