நாட்டிலுள்ள அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படுவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கையை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் இனவாத மோதல்களின்றி தேசிய ஐக்கியத்துடன் நாடு என்ற ரீதியில் இலங்கை தரமுயர்த்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே லக்ஷ்டன் கிரியெல்ல மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சுதந்திரம் கிடைத்த பின்னர், தயாரிக்கப்பட்ட இரண்டு அரசியலமைப்புக்களிலும் சிறுபான்மையினர் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. இதனாலேயே 30 வருட கால யுத்தம் இடம்பெற்றது.
முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவரத்தன ஆகியோரின் நிர்வாக காலப்பகுதியில் நாட்டிற்காக இரண்டு அரசியலமைப்புக்கள் வகுக்கப்பட்ட போதிலும், அந்த சந்தர்ப்பத்தில் இவை இரண்டிலும் சிறுபான்மையினர் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. சிறுபான்மை மக்கள் நிராகரிக்கப்பட்ட நிலைமையைக் காணக்கூடியதாக இருந்தது.
இருப்பினும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் சுதந்திரத்தின் பின்னர், உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்களில் அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுடன் அனைத்து இனத்தவரதும் உரிமைகளை பாதுகாக்கும் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டது. இதனால், இனவாத மோதல் இன்றி அந்த நாடுகள் அபிவிருத்தியடைந்தன. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் 10 முக்கிய நாடுகளில் இடம்பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் இலங்கை 150வது இடத்திலேயே காணப்படுகிறது.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய அரசியலமைப்பு: லக்ஷ்மன் கிரியெல்ல
Monday, October 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment