கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் தான் தல அஜித்குமார், இவரது ஆரம்ப காலத்தில் காதல் படங்களில் மட்டும் தான் நடித்து வந்தார். தற்போது மக்கள் மனதில் மிகுந்த இடத்தை பிடித்தவர் இவர், மேலும் இன்றைய சினிமாவில் இவர் ஆக்ஷன் படங்களில் மட்டும் நடித்து வருகின்றார். முன்பு ராஜிவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. அப்படத்தில் பலரும் படம் பார்ப்பதற்கு முன் அஜித்திற்கு தான் ஐஸ்வர்யா ராய் ஜோடி என்று நினைத்தார்கள். ஆனால், தபு தான் ஜோடியாக நடித்தார்.
இவ்வளவு நாட்களுக்கு பிறகு ராஜிவ் மேனன் விளக்கம் அளித்துள்ளார், அதில் ‘அஜித் இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர், அப்போது அவர் இவ்வளவு பெரிய இடத்தை அடைவார் என்று தெரியாது. ஒரு படம் என்றால் தீபாவளி பரிசு போல் தான், ஒரு ஸ்வீட் பாக்ஸில் இனிப்பு இருக்கும் என்று எதிர்ப்பார்த்து திறப்பீர்கள். ஆனால், வாட்ச் இருந்தால் சந்தோஷம் தானே, அப்படித்தான் இதுவும் என்று கூறியுள்ளார்.
Monday, October 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment