தெலுங்கில் உச்சாணிக் கொம்பில் இருந்தாலும், தமிழில் உடைந்த அச்சாணியாகக் கூட இல்லை ரகுல் ப்ரீத்திசிங்! ‘ஸ்பைடர்’ தனது ஆசையை நிறைவேற்றும் என்று காத்திருந்தவருக்கு அப்படத்தின் கலெக்ஷன் ரிப்போர்ட், எக்குத்தப்பான ஈசிஜி ரிப்போர்ட் ஆனதுதான் பரிதாபம்.
விரைவில் அறிவிக்கப்படவிருக்கிற விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் காம்பினேஷன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துவிட வேண்டும் என்று இப்பவே காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறாராம்.
ஆனால், ‘2 பாயின்ட் 0’ பட நாயகி எமி, ரகுலை விடவும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்.
இப்படி குருவிகள் இரண்டும் தானியத்துக்கு சண்டைப் போட்டுக் கொண்டிருக்க, வேடன் விஜய் மனசில் என்ன இருக்கிறதோ, யார் கண்டது?
Wednesday, October 18, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment