Saturday, October 28, 2017

இலங்கையில் முதற்தடவையாக இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை நேற்று வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள் (Smart National Identity Card) என அழைக்கப்படும் இவ் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஏற்கனவே அடையாள அட்டைகளை வைத்திருப்பவர்கள் இந்த அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையில்லை. அதுபோல, தற்போதுள்ள தேசிய அடையாள அட்டை நல்ல நிலையில் இருந்தால் அவர்கள் புதிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

எதிர்வரும் காலங்களில் இலத்திரனியல் அடையாள அட்டைக்கான சட்டஒழுங்குகள் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தற்பொழுது அமுலிலுள்ள அடையாள அட்டையை முற்றாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த அடையாள அட்டையில் 12 இலக்கங்கள் காணப்படுகின்றன. சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பின் (international civil aviation organization – icao) தரத்திற்கு அமைவான படம் மற்றும் இயந்திரத்தினால் வாசிக்கக்கூடிய பார்குறியீடு என்பவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பெயர், பிறந்த இடம், முகவரி மற்றும் பாலினம் போன்றன மும்மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளதுடன் அடையாள அட்டைக்கு சொந்தக்காரரின் கையொப்பமும் இவ்வடையாள அட்டையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer