Saturday, October 28, 2017

கட்சிக்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகுல் காந்திக்கு உண்டு என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் மாகன் தெரிவித்துள்ளார். சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராத் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அளித்த பேட்டியில், ‘‘மோடி அலை ஓய்ந்து விட்டது. நாட்டை வழி நடத்தும் தகுதி ராகுல் காந்திக்கு உண்டு” என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜய் மாகன் நேற்று கூறுகையில், ‘‘பிற கட்சிகள் ராகுலை ஏற்றுக்கொள்வதை பற்றி எல்லாம் பெரிதாக எண்ணவில்லை. காங்கிரசில் நாங்கள் எங்களின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் ராகுலை எப்போதும் ஏற்றுக் கொண்டுள்ளோம். கட்சிக்கும், ஐ.மு. கூட்டணிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகுல் காந்திக்கு உண்டு. கட்சியின் தலைவர் பதவியை அவர் ஏற்பது சரியான காலகட்டத்தில் நடக்கும்” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer