வடக்கு மாகாண மக்களுக்கான முன்னேற்ற செயற்பாடுகள் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுக்கு இராணுவத்தை பயன்படுத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரியுள்ளதாக இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
தனக்கோ தனது படைத்தரப்பினருக்கோ எவ்வித அரசியல் நோக்கமும் கிடையாது என்று தெரிவித்த இராணுவத் தளபதி, மக்களின் நலனை கருத்திற்கொண்டே அபிவிருத்திப் பணிகளுக்கு இராணுவத்தை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்ததாகவும் கூறியுள்ளார்.
அண்மையில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 5 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கட்டடங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. இதுவும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் 68வது ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சமய வழிபாடுகளில் கலந்து கொண்டு பேசும் போதே இராணுவத் தளபதி மேற்கண்ட விடயங்களைக் தெரிவித்துள்ளார்.
Home
»
Sri Lanka
»
நலன்புரி நடவடிக்கைகளுக்கு இராணுவத்தை பயன்படுத்துமாறு சி.வி.விக்னேஸ்வரனிடம் வேண்டினேன்: மகேஷ் சேனநாயக்க
Tuesday, October 3, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment