புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழு முன்வைத்துள்ள இடைக்கால அறிக்கையில் நாட்டின் ஒற்றையாட்சித் தன்மைக்கும், பௌத்தத்துக்குமான முதலிடத்துக்கான அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி முக்கியஸ்தர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் நேற்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இதன்போதே, விமல் வீரவங்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான முயற்சி, பாராளுமன்றத்தில் வாக்களிப்புக்கு விடப்படுவதற்கு முன்னர், அமைச்சரவை மட்டத்திலேயே இல்லாது செய்யப்பட வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணி எடுத்துரைத்துள்ளது.
சந்திப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த விமல் வீரவங்ச, “குறித்த இடைக்கால வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள், நாட்டின் ஒற்றையாட்சித் தன்மைக்கும் பௌத்தத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைக்கும், பாதிப்பு ஏற்படுத்தும் என்று ஜனாதிபதிக்கு விளக்கினோம்.
அறிக்கையை மேற்கோள்காட்டி, ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டினோம். இந்த முன்மொழிவுகள், மக்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதற்காக, மிகவும் கவனமான முறையில் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்தியாவின் அழுத்தத்தின் கீழ் 13வது திருத்தத்தின் போது, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன, அரசியலமைப்பைக் காப்பதற்கான சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். இப்போது, அவற்றையும் நீக்குவதற்குத் திட்டமிடப்படுகிறது.
அதற்கு ஜனாதிபதி, "ஜனாதிபதி ஜயவர்தனவால் கூடத் தொடப்படாத ஒரு விடயத்தை, நான் எப்படி அனுமதிக்க முடியும்" எனக் கூறினார்” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
புதிய அரசியலமைப்பினால் ஒற்றையாட்சிக்கு பாதிப்பு; மைத்திரியிடம் விமல் வீரவங்ச எடுத்துரைப்பு!
Saturday, October 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment