Monday, October 23, 2017

தமிழக உணவுத்துறை அமைச்சர்  காமராஜ் மீது குமார் என்பவர் கொடுக்கப்பட்ட புகாரின் மீதான முதற்கட்ட விசாரனை மன்னார்குடி காவல் நிலையத்தில் நடந்திருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கீழவாழாச்சேரியை சேர்ந்த சிவஞானம் மகன் எஸ்.வி.எஸ் குமார். இவர் தன்னிடம் அமைச்சர் காமராஜ் 30 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக மன்னார்குடியில் அப்போது  டி, எஸ், பி யாக இருந்த அறிவானந்தத்திடம், 3 - 4. 2015 அன்று புகார் அளித்தார். அந்த புகாரின் மீது விசாரனையோ, வழக்கோ பதிவிக்காமல் அமைச்சருக்கு ஆதரவாக தன்னை காவல்துறை மிரட்டுவதாக  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குமாரை மன்னார்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி  போலிசாரிடம் புகாரை தெரிவிக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் போலிசார் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால் குமார் ஆஜராகவில்லை. மன்னார்குடிக்கு சென்றால் தனது உயிருக்கு ஆபத்து வரும் என்று கூறி மேல் முறையீடாக உச்ச நீதிமன்றம் சென்றார். இந்த  நிலையில் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம். பண மோசடி செய்த புகாரில் தமிழக உணவுதுறை அமைச்சர் காமராஜ் மீது சீட்டிங் கேஸ் உடனே பதிவித்து விசாரிக்குமாறு உத்தரவு போட்டது. அவ்வாறு செய்யவில்லை எனில் வழக்கை சி.பி ஐ க்கு மாற்றி விசாரனை நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனை தொடர்ந்து இன்று 23-ம் தேதி மன்னார்குடி காவல் நிலையத்தில் விசாரனை நடந்திருக்கிறது. காலை 11.45 மணிக்கு ஆஜரான குமாரிடம் துவங்கிய விசாரனை  மாலை 4. 50 வரை நடந்தது.  டி.எஸ்.பி அசோகனும் இன்ஸ்பெக்ட்டர் மணிவேலுவும் இரண்டு வீடியோ கேமரா முன் விசாரனை செய்தனர், அடுத்த கட்ட விசாரனைவரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

விசாரனை முடிந்து வெளியில் வந்த எஸ்.வி. எஸ் குமார் கூறுகையில், "கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாள். சென்னை மந்தைவெளி சிருங்கேரி மடத்துதெருவில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கினேன். வீட்டை விற்றவர் 6 மாதத்திற்குள் வீட்டை காலி செய்து கொள்வதாக கூறியிருந்தார் ஆனால் வருட கணக்காகியும் காலி செய்யவில்லை. இந்த பிரச்சனை குறித்து உணவு  துறை அமைச்சர் காமராஜின் மைத்துனர் ராமகிருஷ்ணனிடம் தெரிவித்தேன். அவர் வீட்டை காலி செய்து தறுவதாகவும், அதற்கு 4 தவணையாக 30 லட்சம் பணம் வாங்கிக் கொண்டார். பணம் கொடுக்கும் போது அமைச்சர் காமராஜூம் உடன் இருந்தார். ஆனால் சொன்னபடி வீட்டை காலி செய்து கொடுக்காமல் அலைகழித்தனர். அதனால் கொடுத்த பணத்தை கேட்டேன் கொடுக்க மறுத்தனர். பல முறை மன்றாடினேன் கொடுக்காமல் 22 - 11- 2014 அன்று என்னிடம் வாங்கியது போல் 30 லட்சத்திற்கு புரோநோட் எழுதி கொடுத்தனர். அதன் பிறகு பணம் கேட்கும் போதெல்லாம் அலட்சியம் செய்வதும் மிரட்டுவதும் கொலை மிரட்டல் விடுப்பதுமாக இருந்தனர். அதன் பிறகு காவல் நிலையத்தில் வழக்கு பதவிக்காமல் மிரட்டியதால் நீதிமன்றம் சென்றேன்.

என்னிடம் விசாரித்துள்ளனர். என்னுடைய கருத்தை எழுத்து பூர்வமாகவும் கொடுத்துள்ளேன். அடுத்தக் கட்ட விசாரனை 30ம் தேதி வைத்துள்ளனர். அப்போது என்னிடம் உள்ள ஆவனங்களை எடுத்து வர சொல்லியுள்ளனர். அதோடு விசாரனை நேர்மையாக நடக்கிறது. எனக்கு அமைச்சர், மற்றும் அவரது அக்கா மகன் R.G.குமாரும் மிரட்டுறாங்க அதுகுறித்தும் புகார் அளித்துள்ளேன்." என்றார். ஏற்கனவே அ.தி.மு.க இரண்டு பட்டுக் கிடக்கிறது. அதோடு, டெங்கு காய்ச்சல், விவசா யிகள் பிரச்சினை என ஆட்சிக்கே அவப்பெயராகி கிடக்கிறது. இந்த நிலையில் அ.தி.மு.க அமைச்சர் பண ஏமாற்று வழக்கில் மாட்டியிருப்பது மக்கள் மத்தியில் எரிச்சலை உண்டாக்கியுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer