Saturday, October 21, 2017

“தனியார் நிதி நிறுவனங்களிலிருந்து முறையற்ற விதத்தில் கடன்களைப் பெற்றுக்கொண்டதன் காரணமாக, அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள கிராம மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான நாடளாவிய செயற்திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும். இதற்கான ஆலோசனை 2018ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட பிரேரணையில் முன்வைக்கப்படும்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.

வறுமையை இல்லாதொழிக்கும் கிராமசக்தி மக்கள் இயக்கத்தை மக்கள் மயப்படுத்தும் தேசிய நிகழ்வு நேற்ற வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இந்ந நிகழ்வில் கலந்தகொண்ட உரையாற்றகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக்குவதற்கு வளங்களைப் பெற்றுக்கொடுக்கும் கொள்கையிலிருந்து விலகி பொருளாதார பிரச்சினைகளை உடைய மக்களை அதிலிருந்து மீட்டு அவர்களது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தேவையான வசதிகளையும் வரப்பிரசாதங்களையும் வழங்குதல் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும்.

அரசியல் ரீதியில் ஒருவருக்கொருவர் குறை கூறுவதை விடுத்து வறுமையிலிருந்து விடுபடுவதற்காக கடந்த பல வருடகாலமாக சகல அரசாங்கங்களினாலும் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்களை அனுபவமாகக் கொண்டு கிராமசக்தி மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுதல் அனைவரினதும் கடமையாகும்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer