தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துவதற்காகவே வழக்குகளை அநுராதபுரத்துக்கு மாற்றியுள்ளதாகவும், இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலிறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனால் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சாகல ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “2015ஆம் ஆண்டு 108 பேர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். அதில் 40 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். விடுதலைச் செய்யப்படாத ஏனையோர் தொடர்பில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இயலுமானவரை சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 74 பேர் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் சிங்களவர்கள். 63 பேர் தமிழர்கள். ஏனையவர்கள் முஸ்லிம்கள்.
வவுனியாவில் இருந்து இந்த வழக்குகள் அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். ஒரு விசேட நீதிமன்றத்தை அநுரதாபுரத்திலும் மற்றுமொரு விசேட நீதிமன்றத்தை கொழும்பிலும் ஸ்தாபித்து இந்த வழக்குகளை துரிதமாக விசாரணைக்கு உட்படுத்தும் முகமாகவே வழக்குகள் அநுராதபுர நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்தும் நோக்கிலேயே வழக்குகள் அநுராதபுரத்துக்கு மாற்றம்: சாகல ரத்நாயக்க
Wednesday, October 18, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment