நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பு நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவினர் மூன்றரை மணி நேரம் சோதனை நடத்தினர். சோதனையில் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என்று தகவல் பரவியது. ஆனால், விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தவில்லை என்று ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு குழு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அப்படியானால், விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார் என்ற கேள்வி எழுந்தது.
இதையடுத்து விஷாலின் மேனேஜரும், விஷால் நற்பணி இயக்க மாநில தலைவருமான முருகராஜை சந்தித்து கேட்டபோது, சோதனை நடத்தியது ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவினர் அல்ல. வருமான வரி சோதனையின் டிடிஎஸ் (dts) பிரிவினர் என்றும், ஏசி வெங்கட்ராமன் தலைமையில் 3 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என்று சென்றுவிட்டனர் என்றும் தெரிவித்தார்.
Monday, October 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment