Monday, October 23, 2017

தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தியேட்டர் சங்கங்களுக்கும் முட்டிக் கொண்டது இப்போது. விஷாலின் கடும் முயற்சியால் அடிக்கடி மந்திரிகளை சந்தித்து வந்த இந்த தியேட்டர் குரூப், திடீரென தனியாக போய் சில அமைச்சர்களை சந்தித்ததாம். ‘விஷால்தான்ங்க எல்லாத்துக்கும் முட்டுக்கட்டையா இருக்கார்.

நீங்க 10 பர்சென்ட் வரைக்கும் கூட டாக்ஸ் போட்டுக்கோங்க. தியேட்டர் விஷயத்தில் சுதந்திரமா விற்க அனுமதிக்கணும்’ என்று கேட்டார்களாம். அடுத்த நிமிஷமே தகவல் விஷால் காதுக்கு வந்து சேர, அட சகுனிகளா? என்று மனம் நொந்திருக்கிறார்.

அப்புறமென்ன? தியேட்டர்காரர்களின் கொள்ளையை கருவறுத்தே தீருவது என கிளம்பிவிட்டார். கொள்ளை விலை பாப்கார்ன், பார்கிங் பேராசை, அரசு நிர்ணயித்ததை விட அதிக விலை டிக்கெட், இதற்கெல்லாம் முடிவு கட்ட கிளம்பியிருக்கிறார். முக்கியமாக தியேட்டர்களில் அம்மா குடிநீர் பாட்டிலை அதே விலைக்கு விற்க வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார். சண்டை எங்கு போய் முடியுமோ?

0 comments :

Post a Comment

 
Toggle Footer