ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிப் பணிகளில் அமெரிக்காவுக்கு இந்தியா உதவ வேண்டும் என ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க இந்திய நட்புறவு கவுன்சில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் பேசிய போது, ஆப்பானைஸ்தானுக்கு இந்தியா ஏற்கனவே பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது. அந்த பிராந்தியத்தில் இரு நாடுகளும் எங்களுக்கு முக்கிய நட்பு நாடுகள். ஆனால் ஆப்கானிஸ்தானின் உட்கட்டமைப்பு மற்றும் நிதி விவகாரத்தில் மட்டுமல்லாது, பாகிஸ்தானையும் கருத்தில் கொண்டு, ஆப்கானின் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திலும் இந்தியா உதவ வேண்டும்.
பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அவர்களின் புகலிடஙக்ளை ஒழிக்கவும், ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்கு ஆசியாவில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. பயங்கரவாதிகளின் கரங்களுக்கு அணு ஆயுதம் செல்லாமல் இருப்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றுள்ளார்.
Home
»
India
»
ஆப்கானிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா உதவ வேண்டும் : அமெரிக்கா
Wednesday, October 18, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment