பங்களாதேஷில் தங்கியுள்ள ஆயிரக் கணக்கான றோஹிங்கியா அகதிகளை மீளப் பெற மியான்மார் அரசு சம்மதம் தெரிவித்ததை அடுத்து அவர்களை மீளப் பெறுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடங்கப் பட்டுள்ளன.
இத்தகவலை பங்களாதேஷின் வெளியுறவு அமைச்சர் மஹ்மூத் அலி இன்று திங்கட்கிழமை உறுதிப் படுத்தினார். மியான்மார் அரச தலைவரான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூ குயி மியான்மாரில் றோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் மீது பிரயோகிக்கப் பட்ட இராணுவ ஒடுக்குமுறையைத் தடுக்கத் தவறி விட்டார் என்று சர்வதேசம் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. இந்நிலையில் செப்டம்பர் இறுதியில் அவர் அடையாளம் காணப்பட்ட அகதிகளை மாத்திரம் தான் மியான்மார் அரசு மீள அழைக்கும் எனச் செய்தி வெளியிட்டுள்ளார்.
மியான்மாரில் பல தலைமுறைகளாக றோஹிங்கியா இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் சிறுபான்மை மக்கள் வாழ்கின்ற போதும் அவர்களுக்கு அங்கு குடியுரிமை மறுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ராக்கைன் மாநிலத்தில் அதிகளவில் வாழும் இவர்கள் மீது அண்மைக் காலமாக மியான்மார் அரச இராணுவத்தின் திட்டமிட்ட வன்முறை கட்டவிழ்ப்பால் இலட்சக் கணக்கில் இவர்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வந்தனர்.
ஆனால் சமீப காலமாக பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகள் இவர்களை ஏற்க மறுத்ததால் நிலமை மோசமானது. இறுதியில் சர்வதேசத்தின் அழுத்தத்தின் மத்தியில் இறங்கி வந்துள்ள மியான்மார் அரசு பங்களாதேஷில் உள்ள பல ஆயிரக் கணக்கான அகதிகளை மீளப் பெற முன் வந்துள்ளது. இந்த நடவடிக்கை 1993 இல் மியான்மாருக்கும் பங்களாதேஷுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் படி முன்னெடுக்கப் படும் எனவும் தெரிய வருகின்றது.
அகதிகளை மியான்மார் அரசு அடையாளம் காணும் முயற்சியில் ஐ.நா இன் தலையீடு கிடையாது என்று தெரிய வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Tuesday, October 3, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment