இரட்டை இலைச் சின்னம் தமிழக முதல்வர் எடப்பாடி பழினிச்சாமி அணிக்குச் சென்றால் அ.தி.மு.க. அழிந்துவிடும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். டி.டி.வி.தினகரன் இன்று திங்கட்கிழமை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “ஜெயலலிதா மரணத்தில் நீதி தேவை என்று கூறியவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். தமிழகத்தில் ஒரு இயக்கத்தை அழித்துவிட்டு வளரலாம் என்று நினைத்தால் அது நடக்காது. தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக முடிவு எடுக்காது, இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும். ஒருவேளை ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சென்றால் அழிந்து விடும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ, வருமான வரித்துறைக்கு பயப்படுகின்றனர். முதலமைச்சர், துணை முதலமைச்சர் அணிகளின் பிரமாண பத்திரங்களின் குறைபாடுகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் மனு அளிப்போம். இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை.” என்றுள்ளார்.
Home
»
Tamizhagam
»
இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழினிச்சாமி அணிக்குச் சென்றால் அ.தி.மு.க. அழிந்துவிடும்: டி.டி.வி.தினகரன்
Monday, October 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment