தாய்வான் வங்கி மோசடியுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சாலில முனசிங்க இலங்கைப் பிரஜை கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
முனசிங்க, லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்வான் வங்கிக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, முனசிங்கவை நிறுவனம் தலைவர் பதவியிலிருந்து நீக்கியுள்ளது.
இந்த நிலையில் முனசிங்க இலங்கைப் பிரஜை அல்ல என இன்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு கோட்டே நீதவானுக்கு அறிவித்துள்ளனர்.
முனசிங்க இங்கிலாந்து பிரஜை எனவும், அவரது வீசா காலம் எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் பூர்த்தியாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான மற்றைய நபரான ஜனக சமிந்த இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் இரட்டைக்குடியுரிமை பெற்றுக்கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கணனி ஹெக்கிங் மூலம் அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள வங்கியொன்றின் பணத்தை கொள்ளையிட்டு அதனை பிரித்துக் கொள்ள மேற்கொண்ட முயற்சி தொடர்பிலும் தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Thursday, October 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment