புதிய அரசியலமைப்போ அல்லது சீர்திருத்தமோ தற்போது தேவையில்லை என்கிற தமது முடிவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நேரில் அழைத்து அறிவிப்பதற்கு அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்கள் தீர்மானித்துள்ளன.
மல்வத்த பீடத்தின் மாநாயக்க தேரர், நாடு திரும்பியதும் மகா சங்க சபை கூடி இது குறித்து இறுதி முடிவெடுக்கும் என்றும் தெரியவருகின்றது.
நாட்டுக்கு புதிய அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்பு சீர்திருத்தமோ அவசியமில்லை என்று மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்கள் இணைந்த மகா சங்க சபை தீர்மானித்திருந்தது. எனினும், இதில் மகாநாயக்க தேரர்கள் பங்கேற்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, இவ்விரு பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியையும், பிரதமரையும் அழைத்து தமது நிலைப்பாட்டை நேரில் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Home
»
Sri Lanka
»
புதிய அரசியலமைப்பு தேவையில்லை: முடிவை ஜனாதிபதி, பிரதமரிடம் நேரில் அறிவிக்க மகா சங்க சபை தீர்மானம்!
Saturday, October 21, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment