தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து நுழைவாயில்களையும் மூடி இன்று திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
01) சிறைச்சாலைகளில் பல வருடங்களாக எந்தவிதமான விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும்.
02) உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உடன் தீர்வு காணப்படல் வேண்டும்.
03) சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் அவல நிலை உணர்ந்து பொறுப்புக் கூற வேண்டிய தமிழ் அரசியல் தலைமைகள், அசமந்தப் போக்கினைக் கைவிட்டு உரிய தரப்பிடம் அழுத்தங்கைப் பிரயோகித்து கைதிகளின் விடுதலை விடயத்தில் பொறுப்புக் கூறல் வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக சமூகத்தினால் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Home
»
Sri Lanka
»
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலையில் நுழைவாயில்களை மூடி போராட்டம்!
Monday, October 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment