ஃபேஸ்புக் ஸ்தாபகரும் நிறுவனருமான மார்க் ஸுக்கெர்பேர்க் தனது படைப்பான ஃபேஸ்புக்கின் எதிர்மறை விளைவுகளுக்கு பொது மக்கள் மத்தியில் நேரடியாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
33 வயதாகும் ஸுக்கெர்பேர்க் தனது உருவாக்கமான ஃபேஸ்புக் தான் எதிர்பார்த்ததைப் போன்று மக்களை இணைப்பதற்குப் பதிலாகப் பிரிப்பதற்கே அதன் செல்வாக்கு பெருகி வரும் போது உதவி செய்து வருகின்றது என்றும் இதற்காக வருத்தம் அடைவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதற்குக் காரணமாக ஃபேஸ்புக்கில் காணப்படும் குறைகளைக் களைந்து அதை மேம்படுத்தத் தான் பாடுபடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூரை முன்னிட்டு தனது தளத்திலும் இக்கருத்துக்களை ஸூக்கெர்பேர்க் பதிவு செய்துள்ளார். அமெரிக்காவில் இவ்வருடம் ஜனவரியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற ரஷ்யா மறைமுகமாகச் செயற்பட்டது என்ற குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில் அச்சந்தர்ப்பத்தில் ஃபேஸ்புக்கில் அதிகளவு ரஷ்ய விளம்பரங்கள் ஆக்கிரமித்திருந்தமை தொடர்பில் ஸுக்கெர்பேர்க்கின் மீது லிபரல் கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதையடுத்து அமெரிக்க அரச அதிகாரிகளின் விசாரணைக்கு ஃபேஸ்புக் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
ஃபேஸ்புக்கின் எதிர்மறை விளைவுகளுக்கு நேரடி மன்னிப்புக் கோரினார் மார்க் ஸூக்கெர்பேர்க்
Tuesday, October 3, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment