மியான்மாரில் தற்போது முற்றியுள்ள றோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண யதார்த்தமான அணுகுமுறையே அவசியம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் அதிகபட்சமாக வசித்து வரும் றோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் மீது அந்நாட்டு அரசும் இராணுவமும் கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறை காரணமாகப் பல வருடங்களாக அம்மக்கள் நாட்டை விட்டு இலட்சக் கணக்கில் இடம்பெயர்ந்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக இம்மக்கள் பங்களாதேஷ், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வந்தனர். ஆனால் தற்போது அதிகளவில் பங்களாதேஷ் மற்றும் இந்தியாவை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
பங்களாதேஷுக்கு மட்டும் இதுவரை 6 இலட்சம் பேரும் இந்தியாவுக்கு 40 000 பேரும் றோஹிங்கியா மக்கள் அகதிகளாக வந்து சேர்ந்துள்ளனர். இவர்களை இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தையின் பின்னர் மியான்மாருக்கே திருப்பி அனுப்ப இவ்விரு நாடுகளும் முயன்று வருகின்றன. ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் ராக்கைன் மாநிலத்தில் மறுபடியும் வன்முறை வெடித்ததின் பயனாக இம்முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள றோஹிங்கியா அகதிகள் தம்மை நாடுகடத்துவதற்கு எதிராக இந்திய சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்த விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில் தான் இந்திய வெளியுறவு அமைச்சர் இவ்விவகாரத்தில் யதார்த்தமான ஆக்கபூர்வமான நடவடிக்கை தேவை என்று தனது கருத்தை முன் வைத்துள்ளார்.
Saturday, October 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment