இந்தியாவில் நடைபெறும் அகால மரணங்களில் நான்கில் ஒன்று, அசுத்தமான காற்றினால் ஏற்படுவதாகவும், உலகில் மிக அசுத்தமான காற்றுள்ள நாடு இந்தியா எனவும் அண்மைய புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது.
உலகில் ஒவ்வொரு வருடமும் யுத்தம், வன்முறை, எயிட்ஸ், மலேரியா மற்றும் பிற காரணிகளால் மக்கள் உயிரிழப்பதை விட, அசுத்தமான காற்றைச் சுவாசித்தும், அசுத்தமான குடிநீரை பருகியும் உயிரிழப்பவர்கள் அதிகம் என்கிறது இப்புள்ளிவிபரம்.
வளிமண்டலத்துடன் இராசயனப் பதார்த்தங்கள், நச்சுப் பதார்த்தங்கள் கலப்பதால் காற்று மேலும் மாசடவைதாகவும், ஆபிரிக்க மற்றும் ஆசிய நாட்டு மக்களே இதனால் அதிகமாக பாதிக்கபப்டுவதாகவும் தெரிவிக்கும் இப்புள்ளிவிபரம், கடந்த 2015ம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 2.5 மில்லியன் மக்கள் அசுத்தமான வளிமண்டலத்தினால் உயிரிழந்ததாக தெரிவிக்கிறது. சீனா, பங்களாதேஷ், வட கொரியா மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகளும் இப்பட்டியலில் முன்னிலையில் உள்ளன.
The Lancet Medical எனும் அமெரிக்க சுகாதாரப் பத்திரிகயே இத்தகவல்களை வெளியிட்டுள்ளன.
Friday, October 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment