எப்போ பார்த்தாலும் இட்லி, தோசை தானா… சாப்பாட்டு மேஜையில் பெண்கள் எதிர்க்கொள்ளும் கேள்வி இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினசரி அடிப்படையில் நமது மூன்று நேர உணவு வகையில் இட்லி அல்லது தோசை இடம் பிடித்திருப்பதை பார்த்து சலித்துக்கொள்வார்கள். ஆனால், நமது தென்னிந்திய உணவு வகை உடல் நலத்திற்கு ‘பெஸ்ட்’ என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், உடலில் தாது சத்து குறைபாட்டை இட்லி, தோசை போக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவில் பெரும்பாலானோர் சைவ உணவு பழக்கம் கொண்டவர்கள். அதனால் தாது குறைபாட்டால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால், தென்னிந்திய உணவான இட்லி, தோசையால் இந்த குறைபாடு நீங்குகிறது. நமது உடலில் உள்ள தாதுக்களை பருப்பு, எண்ணெய் வித்துக்கள், தானியங்கள் ஆகியவை பாதுகாக்கின்றன. எனவே உடலுக்கு போதுமான இரும்பு, துத்தநாகம் ஆகியவை கிடைக்கின்றன என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Monday, October 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment