பனாமா பேப்பர் விவகாரத்தில் பாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று கைது உத்தரவு பிறப்பித்திருப்பதாக அவரது சட்டத்தரணிகள் தகவல் அளித்துள்ளனர்.
நவாஸ் ஷெரீஃப் தற்போது தனது துணைவியாரான கல்சுமின் புற்று நோய் சிகிச்சைக்காக அவருடன் இலண்டனில் தங்கியுள்ளார். இந்நிலையில் அண்மைக் காலமாக பனாமா பேப்பர்ஸ் கசிவடைந்து பல முக்கிய பிரமுகர்களின் ஊழல் விவகாரம் அம்பலமான நிலையில் இது தொடர்பில் நவாஸ் ஷெரீஃப் மீது இரு வழக்குகள் பதியப் பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது.
இந்நிலையில் தான் எந்நேரமும் கைது செய்யப் படலாம் என்பதால் நவாஸ் ஷெரீஃப் இலண்டனில் தொடர்ச்சியாகக் காலம் தாழ்த்துவதாகவும் கூறப்படுகின்றது. நவாஸ் ஷெரீஃப் இதற்கு முன்னதாக 1993 ஆம் ஆண்டு ஓர் ஊழல் விவகாரம் காரணமாகவும் 1999 இல் இராணுவ ஆட்சி ஏற்பட்ட போதும் சிறை வாசம் அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
பாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்நாட்டு நீதிமன்றம் கைது உத்தரவு
Saturday, October 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment