Monday, October 2, 2017

மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை சம்பவம் குறித்து பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது வேதனையளிப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நடைபெற்ற இடதுமுன்னணி வாலிபர் சங்கத்தின் விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், ‘கௌரி லங்கேஷைக் கொன்றவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப் படலாம், முடியாமலும் போகலாம். ஆனால், அவர் கொல்லப்பட்டதை ஒரு பெரிய கூட்டமே சமூக வலைதளங்களில் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. நமக்கெல்லாம் அவர்கள் யாரென்றும், அவர்கள் கொள்கைகள் என்னவென்றும் நன்றாகவே தெரியும். அவர்களெல்லாம் பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள்தான் என்பது அதிர்ச்சிக்குரிய உண்மை. இதையெல்லாம் பார்த்தும் மோடி மவுனமாக இருப்பதாக இருப்பது எனக்கு வேதனையளிக்கிறது. அவர் மவுனமாக இருப்பதன் மூலம் என்னைவிட சிறந்த நடிகர் என காட்ட முயற்சிக்கிறார். அவர் இந்த விவகாரம் குறித்து இனியும் வாய்திறக்காமல் இருந்தால் என் ஐந்து தேசிய விருதுகளையும் அரசிடமே திரும்பத்தர தயங்கமாட்டேன்’ என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி, பெங்களூருவில் உள்ள அவரது வீட்டு வாசலில் வைத்து மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer