எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அனைத்துத் தேர்தல்களிலும் தமது கட்சியே வெற்றிபெறும் என்று பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடக்குக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பஷில் ராஜபக்ஷ, தமது புதிய கட்சியான பொதுஜன முன்னனியின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.
இதன் ஒரு கட்டமாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தற்போதுள்ள அரசாங்கம் 33 மாதங்களாக செயற்பட்டு வருகின்றது. மஹிந்த ராஜபக்ஷ, 2006ஆம் ஆண்டு காலப்பகுதியிலே ஆட்சி ஏறும்போது வடக்கின் நிலை எப்படி காணப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும். அவ்வாறான நிலையில் இருந்து வடக்கு மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு சமாதானத்தையும், அபிவிருத்தியையும், சக்தியையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற இலக்குடனேயே அவர் ஆட்சிப் பீடம் ஏறியிருந்தார்.” என்றுள்ளார்.
Sunday, October 1, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment