சோமாலியாவைத் தளமாகச் கொண்டு கிழக்கு ஆப்பிரிக்காவில் செயற்பட்டு வரும் அல் ஷபாப் போராளிகள் அந்நாட்டில் தன்னாட்சி மாகாணமாகச் செயற்பட்டு வரும் பண்ட்லந்தில் உள்ள போசாசோ நகரில் போலிசார் மீது துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் 7 போலிசார் பலியானதாக அல் ஷபாப் இயக்கத் தளபதி செய்தி வெளியிட்டுள்ளார். சோமாலியாவில் தீவிரவாத அமைப்பாக அறியப்படும் அல் ஷபாப் போராளியினருக்கு மிக நீண்ட காலமாகவே அல் கொய்தா போன்ற அமைப்புக்களுடன் தொடர்பு இருந்து வருகின்றது.
அதிலும் சமீப காலமாக இவர்கள் ISIS தீவிரவாத இயக்கத்துடனும் தொடர்புகள் வைத்திருப்பதாகத் தெரிய வருகின்றது. 2015 இல் இராணுவ நடவடிக்கை மூலம் சோமாலியாவின் முக்கிய நகரங்களில் இருந்து இவர்கள் விரட்டி அடிக்கப் பட்ட போதும் தற்போது பல கிராமப் பகுதிகள் இவர்கள் வசமுள்ளது. 2014 ஆம் ஆண்டு கணக்கின் படி அல் ஷபாப் குழுவில் 7000 தொடக்கம் 9000 போராளிகள் உறுப்பினர்களாக இருப்பதாகவும் ஓர் கணிப்பு கூறுகின்றது.
நிகழ்காலத்தில் பல சர்வதேச நாடுகள் அல் ஷபாப் இனை தீவிரவாத இயக்கப் பட்டியலில் சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Monday, October 9, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment