நாகையில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பின் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் பொறையூரில் எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்துபோல இனி நிகழாத வண்ணம் தமிழகத்தில் பழுதான அரசு அலுவலகங்கள் கண்டறியப்பட்டு உடனடியாக பூட்டப்படும் என தெரிவித்தார்.
பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓ.எஸ்.மணியன் குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தில் ஆங்கிலேயேர் காலத்தில் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
0 comments :
Post a Comment